டி20 உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் - மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி...!
இன்று நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி 2-வது ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆஸ்திரேலியா பயணம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்றோடு பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடையப்போகிறது.
2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அணி தோல்வி
உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி 4 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
இதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி அடைந்தது.
இந்நிலையில், இன்று நடந்த இந்தியா - மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132ரன்கள் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.