20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு : முதலிடத்தில் இந்திய அணி...!

Cricket Indian Cricket Team
By Nandhini 4 மாதங்கள் முன்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது. இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி நீடித்து வருகிறது. 

cricket-indian-cricket-team

கிரிக்கெட் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியல் -

1-வது இடத்தில் இந்திய அணி - 268 புள்ளிகள்

2-வது இடத்தில் இங்கிலாந்து அணி - 261 புள்ளிகள்

3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்கா அணி - 258 புள்ளிகள்

4-வது இடத்தில் பாகிஸ்தான் அணி - 258 புள்ளிகள்

5-வது இடத்தில் நியூசிலாந்து அணி - 252 புள்ளிகள்

6-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணி - 250 புள்ளிகள்

7-வது இடத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி - 241 புள்ளிகள்

8-வது இடத்தில் இலங்கை அணி - 237 புள்ளிகள்

9-வது இடத்தில் வங்காளதேசம் அணி - 224 புள்ளிகள்

10-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி - 219 புள்ளிகள்