முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா - நியூசிலாந்து இன்று நேருக்கு நேர் மோதல்
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா - நியூசிலாந்து அணி இன்று நேருக்கு நேர் மோத உள்ளன.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. சமீபத்தில் இந்தூரில் நடைபெற்ற கடைசி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இப்போட்டியின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கி அதிரடியாக ரன்களை குவித்து அசத்தினர்.
இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்கள் எடுத்து, 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்தியா - நியூசிலாந்து இன்று நேருக்கு நேர் மோதல்
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இ
ந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா என்று பெரிய பட்டாளமே உள்ளதால் இந்திய அணி வலுவாக இத்தொடரை வெல்லும் என்று நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
India?? and New Zealand?? are ready to hit their best shots? in the 1️⃣st T-2️⃣0️⃣.
— Kisma Global (@KismaGlobal) January 27, 2023
Watch? to find out who wins#kisma #kismaglobal #india #Newzeland #indvsnz #hardikpandya #t20 #t20league #Cricket #cricketfans #Cricketarmy #cricketlife #cricketfever pic.twitter.com/ieWZNHMIMU