3-வது கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா - நியூசிலாந்து இன்று நேருக்கு நேர் மோதல்...!

Cricket Indian Cricket Team New Zealand Cricket Team
By Nandhini Jan 24, 2023 06:41 AM GMT
Report

கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.

1-வது ஒருநாள் கிரிக்கெட் -

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

2-வது ஒருநாள் கிரிக்கெட் -

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

cricket-india-vs-new-zealand--3rd-odi-today

இந்தியா - நியூசிலாந்து இன்று நேருக்கு நேர் மோதல்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.