முதல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் - மும்பையில் இன்று இந்தியா- இலங்கை அணி நேருக்கு நேர் மோதல்...!

Cricket Sri Lanka Cricket Indian Cricket Team
By Nandhini Jan 03, 2023 06:39 AM GMT
Report

மும்பையில் இன்று நடைபெற உள்ள முதல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா- இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

முதல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகை தந்துள்ளது.

இதனையடுத்து, இன்று முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு இந்தியா- இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஹர்திக் பாண்டயா அணியை வழி நடத்துகிறார். ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இத்தொடர் அமைய உள்ளது. 

cricket-india-srilanka-the-first-match-t20