பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா - ஹர்திக் பாண்டியாவிற்கு முத்தம் கொடுத்த ஆப்கானிஸ்தானியர்..!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றியை ஆப்கானிஸ்தானியர்கள் கொண்டாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இதனையடுத்து, நேற்று 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

வைரலாகும் வீடியோ
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானில் ஒரு வீட்டில் டிவியில் இப்போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இந்தியா வெற்றிபெற்றதையடுத்து, ஓடி வந்து டிவியில் ஹர்திக் பாண்டியாவிற்கு முத்தம் கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
Afghanistan fans celebrating India's victory...#INDvsPAK #PakistanFloods #Pakistan #PKMKBForever #माफी_मांगो_स्वामी #TejRan pic.twitter.com/hzMJyrreUK
— Satish Singh (@satishsingh05) August 29, 2022