செந்தில், குணா, வேலு, தம்பி இவங்க எல்லார விட ஐபிஎல்’ல டாப்’பு தல தான்..!
இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் தோனி. தோனி கை வைத்தது எல்லாம் வெற்றி தான்.
சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே , ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட்டில் முதல் இடம் என அனைத்து கோப்பையையும் வென்ற ஒரே கேப்டன் தோனி.
இவ்வளவு பெருமைகளை பெற்ற தோனி, ஐ.பி.எல். கோப்பையையும் 4 முறை வென்றுள்ளார்.சென்னை அணிக்காக முதல் சீசனில் இருந்தே விளையாடும் தோனி, இடையில் 2ஆண்டுகள் புனே அணிக்காக விளையாடினார்.
முதல் ஆண்டில் தோனியை ஆறரை கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதுவரை ஐ.பி.எல். மூலம் தோனி சம்பளமாக 152 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. மும்பை அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தந்த ரோகித் சர்மா, ஐ.பி.எல்..மூலம் 146 கோடியே 60 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
தற்போது மும்பை அணிக்காக ரோகித் 16 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சம்பளம் பெற்ற வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார். முதல் சீசனில் இருந்தே தற்போது வரை அவர் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார்.
10 லட்சத்தில் தொடங்கிய விராட் கோலி, 18 கோடி வரை சம்பளம் பெற்றார். இதுவரை ஐ.பி.எல். மூலம் விராட் கோலி பெற்ற சம்பளம் 143 கோடியே 20 லட்சம் ரூபாய்.
இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சின்ன தல ரெய்னா.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்ற ரெய்னா, 110 கோடியே 70 லட்சம் ரூபாய் வரை ஐ.பி.எல். மூலம் ஊதியமாக பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் 5வது இடத்தில் ஏபி டேவில்லியர்ஸ் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் வெளிநாட்டு வீரரும் இவரே, இதுவரை ஐ.பி.எல். மூலம் டிவில்லியர்ஸ் 102 கோடியே 50 லட்சம் ஊதியமாக பெற்றுள்ளார்.