‘நான் அனைத்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்...’ - ஹர்பஜன் சிங் அறிவிப்பு - ரசிகர்கள் சோகம்

cricket harbhajan-singh
By Nandhini Dec 24, 2021 10:42 AM GMT
Report

இந்திய அணியின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அதில், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்தன. வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிலிருந்து இன்று நான் விடைபெறுகிறேன். இந்த 23 வருட நீண்ட பயணத்தை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்’ அதை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றினார். முழு மனதுடன் நன்றி என தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் தனது பந்துவீச்சில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளார்.

2001ல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

அப்போது ஹர்பஜனுக்கு 21 வயதுதான் அந்த போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முக்கிய அங்கமாக மாறினார்.

2000ம் ஆண்டு முதல் 2010 வரை ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஜோடி இந்திய சுழற்பந்து வீச்சில் முக்கிய அங்கமாக இருந்தனர். மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 2011 உலகக் கோப்பை மற்றும் 2007 டி-20 உலகக் கோப்பை வென்ற போது இந்திய அணியில் இருந்தார்.

2011 உலகக் கோப்பையில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், 2007 டி20 உலகக் கோப்பையில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார்.

ஹர்பஜன் சிங்கி மொத்தமாக 103 டெஸ்ட் போட்டியில் விளையாடி விக்கெட் 417 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 236 ஒருநாள் போட்டியில் 269 விக்கெட், 28 டி20 போட்டியில் 25 விக்கெட் வீழ்த்தினார்.