பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஓய்வு - பேரதிர்ச்சியில் ரசிகர்கள்…!

David Warner Cricket
By Nandhini Nov 15, 2022 12:14 PM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை கடந்த 13ம் தேதி நிறைவடைந்தது. இப்போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.

ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், குரூப் 1ல் இருந்து அரையிறுதியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியுடன் இணைந்ததால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி 2-வது அணியாக இப்போட்டியிலிருந்து வெளியேறியது.

cricket-david-warner-retire-from-test-cricket

டேவிட் வார்னர் ஓய்வு

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடருக்குப் பிறகு 1 வருடத்திற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று டேவிட் வார்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2023ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் 2024 T20 உலகக் கோப்பையில் விளையாடப் போவதாக வார்னர் தெரிவித்திருக்கிறார்.