நீண்ட இடைவெளிக்கு பின் சேப்பாக்கத்தில் நடக்க உள்ள சர்வதேச போட்டி - வெளியான அறிவிப்பு
நீண்ட இடைவெளிக்கு பின் சேப்பாக்கத்தில் சர்வதேச போட்டி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம், பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 1916-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மைதானம் இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மைதானத்தில் 1934-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது.
அதில், இங்கிலாந்து அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்கு முதல் வெற்றியை வழங்கிய மைதானம் என்ற பெருமை சேப்பாக்கம் மைதானத்துக்கு இருக்கிறது.
கடந்த 1952-ம் ஆண்டு இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை இந்த மைதானத்தில்தான் இந்தியா பதிவு செய்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் சர்வதேச போட்டி
கடைசியாக 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆண்டு (2023) ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப் பயணத்தின்போது 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.