நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ விவகாரம் - முக்கிய குற்றவாளி அதிரடி கைது!

Rashmika Mandanna Tamil Actress Actress
By Jiyath Jan 21, 2024 03:30 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாசமான போலி வீடியோ( Deep Fake) சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ விவகாரம் - முக்கிய குற்றவாளி அதிரடி கைது! | Creator Of Rashmika Deep Fake Video Arrested

ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

குற்றவாளி கைது 

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் டெல்லி காவல் துரையின் சைபர் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ விவகாரம் - முக்கிய குற்றவாளி அதிரடி கைது! | Creator Of Rashmika Deep Fake Video Arrested

மேலும், டீப் பேக் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட இணைய முகவரியின் அமைவிடம் பற்றிய தகவல்களை, சமூக வலைத்தள நிறுவனமான மெட்டாவிடம் பெற்றனர்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர் தான் ராஷ்மிகாவின் டீஃப் பேக் வீடியோவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.