ஓடும் ரயில் மீது கிரேண் சரிந்து விழுந்து பயங்கர விபத்து - 22 பேர் பலி!

Thailand Accident Death
By Sumathi Jan 14, 2026 01:52 PM GMT
Report

ஓடும் ஒயில் மீது கிரேண் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

ரயில் விபத்து

தாய்லாந்து, பேங்காக்கின் வடகிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் இருந்து உபோன் ராட்சதானி மாகாணத்துக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

ஓடும் ரயில் மீது கிரேண் சரிந்து விழுந்து பயங்கர விபத்து - 22 பேர் பலி! | Crane Moving Train In Thailand At Least 22 Killed

அப்போது ரயில் மீது கிரேண் விழுந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில், அதிவேக ரயில் திட்டப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

22 பேர் பலி

இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேண் சரிந்து ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மனைவி உயிரைக் காப்பாற்றிய கிழங்கு - நெகிழ்ச்சி சம்பவம்!

மனைவி உயிரைக் காப்பாற்றிய கிழங்கு - நெகிழ்ச்சி சம்பவம்!

இதனால், ரயில் தடம் புரண்டு தீப்பற்றியது. தற்போது தீ அணைக்கப்பட்டுவிட்டது. எனினும், இடிபாடுகளில் மீட்கப்படாத உடல்கள் இருக்கின்றன.

எனவே, உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.