பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? - தமிழக அரசு
தீபாவளி கொண்டாட்டங்களின்போது பட்டாசு விபத்துகள் நிகழும் வாய்ப்புள்ளதால் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி பண்டிகையை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
* பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.
* பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
* எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது.
* குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
*சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்.
* வெற்றுக் கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது.
* பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.
* மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை எறியக் கூடாது.
* சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது.

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள் IBC Tamil

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
