வெடித்து சிதறிய பட்டாசு ஆலை...பரிதாபமாக உயிரிழந்த 9 பேர் - முதலமைச்சர்,பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

M K Stalin Kanchipuram Narendra Modi Death
By Thahir Mar 23, 2023 02:18 AM GMT
Report

காஞ்சிபுரம் மாவட்டம் குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று தீடிரென ஏற்பட்ட வெடி விபத்தால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு 

மேலும் இந்த விபத்தில் 13க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

cracker-factory-accident-announced-relief

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காஞ்சிபுரம் வெடிவிபத்து குறித்து மிகுந்த வேதனையடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு 

பிரதமர் நரேந்திர மோடியும் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.