சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை வெளியிடப்படும்- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

cps-exam-india
By Jon Dec 31, 2020 07:02 PM GMT
Report

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி இன்று வெளியிட இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகிறார்கள்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. எனினும் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அதனை உறுதி செய்திருக்கிறார். ஏற்கனவே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது என்றும், பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தேர்வு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.