தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டிய காங்கிரஸ் - அதிக பிரசங்கித்தனம் என CPM விமர்சனம்

Indian National Congress Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jun 05, 2026 06:26 AM GMT
Report

பிரவீன் சக்கரவர்த்தி பதிவை அதிக பிரசங்கித்தனம் என CPM மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி

அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆக இருந்த சி.வி.சண்முகம் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தான் வாக்குப்பதிவு ஜூன் 18 ஆம் திகதி நடைபெற உள்ளது.

தவெக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டிய காங்கிரஸ் - அதிக பிரசங்கித்தனம் என CPM விமர்சனம் | Cpm Slam Congress Candidate Named For Tvk Alliance

இது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

தவெக கூட்டணிக்கு தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி என்ற பெயரை அறிவித்த நிலையில், இதனை கூட்டணி தலைமையிலான தவெகவின் ஒப்புதலுடன் அறிவித்தாரா, கூட்டணி தலைமை தான் அறிவிக்க வேண்டும் என விவாதம் எழுந்தது.

அதிக பிரசங்கித்தனம்

இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த பதிவு அதிக பிரசங்கித்தனம் என CPM மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். 

தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டிய காங்கிரஸ் - அதிக பிரசங்கித்தனம் என CPM விமர்சனம் | Cpm Slam Congress Candidate Named For Tvk Alliance

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. 

கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை.

தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.