இடைத்தேர்தலில் அதிக பணம் வழங்குவதே தவெகதான் - சண்முகம் குற்றச்சாட்டு

Money Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 01, 2026 01:39 PM GMT
Report

cpm shanmugam accuse tvk gives money for vote: இடைத்தேர்தலில் தவெகவே அதிக பணம் வழங்குவதாக CPIM சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிக பணம் வழங்கும் தவெக

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி சென்னையில் இடதுசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இடைத்தேர்தலில் தவெகவே அதிக பணம் வழங்குவதாக வாக்காளர்கள் தெரிவித்தனர் என குற்றஞ்சாட்டியுள்ளார். 

இடைத்தேர்தலில் அதிக பணம் வழங்குவதே தவெகதான் - சண்முகம் குற்றச்சாட்டு | Cpm Shanmugam Accuse Tvk Gives Money For Vote

இது குறித்து பேசிய அவர், "மதுராந்தகத்தில் நாங்கள் பிரசாரத்துக்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம். அப்போது 'எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் பணம் கொடுக்கவில்லையே.. ' என்று சில கிராம மக்கள் என்னிடம் கேட்டார்கள்.

எந்தெந்த கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்ததாகச் சொன்னார்கள்.

தூயசக்தி, நாங்கள் ஓட்டுக்கு எல்லாம் பணம் கொடுக்க மாட்டோம் என்றுதான் கடந்த தேர்தலிலும் முதல்-அமைச்சர் கூறினார். இப்போதும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார்.

"தவெக அதிக பணம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள்" என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள். இது குறித்து சம்மந்தப்பட்ட தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்.

எங்கள் கட்சியின் பலம், கொள்கைகள் குறித்து எடுத்துரைத்து நாங்கள் எந்த சூழலிலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறினோம்" என தெரிவித்துள்ளார்.