தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
tngovernor
RNRavi
cpmboycottsteaparty
Teaparty
By Swetha Subash
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
நீட் விலக்கு மசோதா தாமதம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி புறக்கணிப்பதாக சிபிஎம் அறிவிப்பு. மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ர உறுப்பினர்கள் யாரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.
நீட் உள்ளிட்டவற்றில் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்ட நிலையில் பங்கேற்கவில்லை எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.