இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படாதுனு சொல்ல முடியாது!

By Swetha Subash May 23, 2022 01:22 PM GMT
Report

பொருளாதாரம் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், கடன் பிரச்சனை, உற்பத்தி பாதிப்பு என பலவும் சந்தையில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் போதிய அளவிலான உணவு பொருட்கள் இறக்குமதியின்மை, கடன் கட்ட முடியாமல் தவிக்கும் நிலை, சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு என பல பாதகமான காரணிகள் உள்ளன.

இதற்கிடையில் இலங்கையில் போராட்டங்கள் வெடித்தது போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை ஏற்படலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவிலும் ஏற்படலாம் என சிபிஎம் கட்சியை சேர்ந்த கனகராஜ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

ஐபிசி தமிழ் யூடியூப் சேனலில் இந்தியாவின் பொருளாதாரம் குறித்தும் எரிப்பொருட்கள் விலை உயர்வு இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்குமா ? போன்ற நெறியாளர் லியோ ஸ்டாலின் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிபிஎம் கட்சியை சேர்ந்த கனகராஜ் பதிலளித்து பேசியுள்ள விவாதம் உங்களுக்காக :