இடைத்தேர்தலுக்கு Gpay மூலம் பணம் - CPI வீரபாண்டியன் குற்றச்சாட்டு

Communist Party Of India Tamil nadu
By Karthikraja Oct 03, 2026 03:18 PM GMT
Report

cpi veerapandian accuse gpay money transfer in by election: இடைத்தேர்தலுக்கு phonepay, Gpay மூலம் பணம் பட்டுவாடா நடப்பதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார்.

Gpay மூலம் பணம் பட்டுவாடா

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

இடைத்தேர்தலுக்கு Gpay மூலம் பணம் - CPI வீரபாண்டியன் குற்றச்சாட்டு | Cpi Veerapandian Accuse Gpay Money In By Election

இதில் பேசிய அவர், "நாங்கள் இடைத்தேர்தலுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது மக்களை சந்திக்கிறோம். ஆங்காங்கே நின்று உரையாற்றுகிறோம், முழுக்க முழுக்க அரசியல் பேசுகிறோம்.

ஆனால், மறுபுறத்தில் வலுவான கூட்டணி இருக்கிறது. பெரிய பெரிய விலையுர்ந்த வாகனங்களில் வருகிறார்கள். குக்கிராமங்களில் கூட 50 வாகனங்கள் உள்ளது. முன்னணி தலைவர்கள் பென்சிலுடன் வெள்ளைதாளில் குறிப்பெடுக்கிறார்கள்.

செல்போனில் பணம் பெறுவது எப்படி, கூகிள் பே, போன் பேயில் பணம் பெறுவது எப்படி என குறிப்பெடுக்கிறார்கள் .நாடு இந்த திசையில் பயணித்தால் தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும். தேர்தல் ஆணையம் பாராமுகமாக உள்ளது.

நபர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை, பணம் கொடுத்து வாக்கு கேட்பதை தான் பார்த்திருக்கிறோம். தெருக்களை, ஊரையே விலை பேசும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அமைச்சர்கள் பலர் அதில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நெடுங்காலமாக உள்ள பிரச்சினைகளை கேட்டு, அதை நாங்கள் தீர்க்கிறோம் என ஊரையே விலை பேசுகிறார்கள். இவ்வளவு நவீன கார்கள் எப்போதாவது குக்கிராமங்களுக்கு வந்திறங்கியது உண்டா?

ஒவ்வொரு வாக்கிற்கும் ரூ.5,000, 10,000 என வழங்கியதற்கு ஆதாரம் இல்லை என கூறுகிறீர்களா? செல்போன்களை எடுத்து பாருங்கள்.

இவ்வளவு காலம் இல்லாமல் இடைத்தேர்தலின் போது உங்கள் ஊரில் கோவில் கட்டணுமா கட்டுகிறோம்., பள்ளிக்கூடம் கட்டணுமா கட்டுகிறோம், இது அரசின் கடமை, ஆனால் இந்த நேரம் பேசுவது ஊரை விலை பேசுவது" என பேசியுள்ளார்.