நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர்.

வயது முதிர்வு காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டதே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார், அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை அறிந்த தொண்டர்கள் மருத்துவமனையில் கூடுவதால், கூட்டங்களை தவிர்க்க மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு IBC Tamil
ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் IBC Tamil