மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக CPI, CPIM அறிவிப்பு

Communist Party Of India Election
By Karthikraja Sep 13, 2026 08:32 AM GMT
Report

cpi and cpim to contest in dharapuram and madurantakam by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் CPI, CPIM போட்டியிட உள்ளதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள CPI, CPIM

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக CPI, CPIM அறிவிப்பு | Cpi Cpim To Contest In By Election

இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.