தவெகவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு - இன்னும் 2 MLA ஆதரவு தேவை

Vijay Communist Party Of India Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 08, 2026 11:06 AM GMT
Report

தவெக ஆட்சியமைக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளது.

தவெகவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

ஆனால்,118 எம்எல்ஏக்கள் இருந்தால் தான் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியும் எனக்கூறி ஆளுநர், தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க மறுத்து விட்டார். 

தவெகவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு - இன்னும் 2 MLA ஆதரவு தேவை | Cpi Cpim Supports Vijay Tvk Still Need 2 Mla

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏ க்கள் தேவைப்படும் நிலையில், 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு தனது ஆதரவை வழங்கியது.

தவெகவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு - இன்னும் 2 MLA ஆதரவு தேவை | Cpi Cpim Supports Vijay Tvk Still Need 2 Mla

மேலும், 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், தலா 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. 

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது செயற்குழுவை கூட்டி ஆலோசித்தன.

இதனையடுத்து, பெரும்பாலான உறுப்பினர்கள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கலாம் என தெரிவித்த நிலையில், நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. 

தவெகவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு - இன்னும் 2 MLA ஆதரவு தேவை | Cpi Cpim Supports Vijay Tvk Still Need 2 Mla

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற தலைவராக தாலி ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதற்கான ஆதரவு கடிதத்தை தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சென்று பெற்று வந்தார்.

அமைச்சரவையில் இடம் பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தவெகவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு - இன்னும் 2 MLA ஆதரவு தேவை | Cpi Cpim Supports Vijay Tvk Still Need 2 Mla

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

cpim supports tvk vijay

இதன் மூலம் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. விசிக இன்று மாலை உயர்நிலைக்குழுவில் கலந்தாலோசித்து, நாளை முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலையையே விசிக எடுக்கும் என்பதால், விரைவில் பெரும்பான்மை பலத்துடன் தவெக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு எம்எல்ஏ வைத்துள்ள தேமுதிகவிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது.