ஜார்க்கண்ட் ஆளுநராக பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்
Tamil nadu
BJP
Draupadi Murmu
By Thahir
ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநர்கள் நியமனம்
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12, 2023) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழகபாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் 13 ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.