“எங்க பண்ணைல நாங்க இப்படி தான் ; எங்க ஓனர் வாசிக்க நாங்க ரசிக்க..ஒரே கூத்தா இருக்கும்” - இணையத்தை கலக்கும் வீடியோ
சோகமோ, மகிழ்ச்சியோ, பூரிப்போ எல்லா உணர்ச்சிகளுக்கும் உற்ற துணையாய் இருக்கும் இசை இங்கும் எல்லோருக்கும் பொதுவானதே.
இசை என்பது மனிதர்களுக்கு மட்டுமானதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தில், தலைமை டிஜிட்டல் சுவிசேஷகராக பணியாற்றும் வாலா அஃப்ஷர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “ மாடுகள் புல்லை மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அப்போது அங்கு வரும் ஒருவர் ட்ரம்பட் இசைக் கருவியை வாசிக்கிறார். அதிலிருந்து வந்த இசை சில மாடுகளை கவனிக்க வைத்தது.
தொடர்ந்து அந்த நபருடன் இன்னும் சிலர் இணைந்து தனித்தனியாக கருவிகளை இசைக்க ஆரம்பித்தனர்.
Did you know cows really enjoy music? pic.twitter.com/P5N3QcGdLM
— Vala Afshar (@ValaAfshar) December 25, 2021
இந்த இசையை கேட்ட பிற மாடுகளும் இசையை கேட்க முன்வந்தது. தொடர்ந்து அவர்கள் வாசித்து முடிக்கும் வரை அந்த மாடுகள் இசையை ரசித்துக்கொண்டே இருந்தன.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை 3 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.