மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு வேண்டாம்.. புதிய விதியை உலகத்துக்கு சொல்வோம்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், புதிய விதியை உலகத்துக்கு வகுப்போம்.என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கக்கூடாது. என்றும் அது மிருகவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இந்த விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில் வாதாடிய போது, மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாடுகளின் மூக்கு சதையில் ஓட்டை போட்டு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது.
இதனால் மாடுகள் பெரிதும் துன்புறுத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அந்த கயிறு இறுக்கும்போதும் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிறது.
மேலும் மூக்கணாங்கயிறு மாட்டின் மூக்கில் இருப்பதால் 24 மணி நேரமும் சுதந்திரமாக செயல்பமுடியாத, சுவாசிக்க முடியாத நிலை உள்ளது .
ஆகவே மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.
இதற்கு பதில் கூறிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு: மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுபதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆகவே மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவது குறித்து புதிய விதிகளை வகுத்து , அதனை உலகத்தை பின்பற்ற செய்வோம் என தெரிவித்து, இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.