பசுவின் சிறுநீரை குடிப்பது மனிதர்களுக்கு கேடு - ஆய்வில் பரபர தகவல்
பசு, எருமை மாடுகளின் சிறுநீரை குடிப்பது மனித உடல்நலத்திற்கு கேடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுவின் சிறுநீர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலர் பசுவின் சிறுநீரை குடிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர். மேலும், அது உடலுக்கு நல்லது என்றும் கருதுகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அதில், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் பசு மற்றும் எருமை மாட்டில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வு தகவல்
இந்த பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவித்து குடல், வயிறு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக பசு மாட்டின் சிறுநீரை விட எருமை மாட்டின் சிறுநீரில் மனித உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன.
எந்த வகையிலும் சிறுநீரை மனிதர்கள் குடிக்க பரிந்துரைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.