மாடுகளை திருடியதாக கூறி 3 முஸ்லிம் இளைஞர்கள் அடித்துக் கொலை!
திரிபுரா மாநிலத்தில் மாடுகளை திருட முயன்றதாக கூறி இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாய் மாவட்டத்தின் வடக்கு மகாராணிபூர் கிராமம் அருகே கடந்த ஞாயிறன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மினிவேனில் 5 கால்நடைகள் அகர்தலா நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட நமஞ்சோய்பாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் அவர்களிடம் விசாரித்துள்ளது. அப்போது சுதாரித்துக்கொண்ட இளைஞர்கள் வாகனத்தை வேகமாக இயக்கினர்.
ஆனால், அந்த வாகனத்தை துரத்திச் சென்று வடக்கு மகாராணிபூர் கிராமம் அருகே மடக்கிய அந்த கும்பல், வாகனத்தில் இருந்தவர்கள் மீது பல்வேறு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியான நிலையில், ஒருவர் தப்பியுள்ளார். ஆனால், அவரையும் முங்கியாகாமி என்ற பகுதியில் மடக்கிய கும்பல், அங்கு வைத்தே அடித்துக் கொன்றுள்ளது.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரிபுரா காவல்துறை தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.