பள்ளி மாணவியை பந்தாடிய பசு மாடு - உரிமையாளர் அதிரடி கைது..!

Chennai Greater Chennai Corporation
By Thahir Aug 10, 2023 11:01 AM GMT
Report

சென்னை அரும்பாக்கத்தில் தெருவில் நடந்து சென்ற 9 வயது பள்ளி மாணவியை பசு மாடு தாக்கிய நிலையில் மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை பந்தாடிய பசு 

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

வீதியில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பசு மாடு திடீரென அந்த பள்ளி சிறுமியை கொம்பால் முட்டித்துாக்கி வீசியது.

Cow that attacked student - owner arrested

பின்னர் அந்த சிறுமியை கீழே வீசி தனது கொம்பால் விடாமல் தாக்கியது. தாய் கற்களை வீசி விரட்ட முயன்றார். மேலும் பள்ளி சிறுமி மற்றும் தாய் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் மாட்டை விரட்ட முயன்றனர்.

அப்போது மாடு அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடுமையாக சிறுமியை தாக்குவதை நிறுத்தவில்லை. பின்னர் பொதுமக்கள் கடும் போராட்டாத்திற்கு பின் பள்ளி சிறுமியை மீட்டனர்.

Cow that attacked student - owner arrested

மாடு தாக்கியதில் காயமடைந்த பள்ளி சிறுமி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி சிறுமியின் தந்தை இது போன்று எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மாட்டின் உரிமையாளர் கைது 

இதனிடையே மாட்டின் உரிமையாளர் மீது உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, கவனக்குறைவாக இருப்பது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மாட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெருக்களை நம்பி மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.