பசுவதையை நிறுத்தினால் உலகில் பிரச்சணை வராது - நீதிமன்றம்
பசுக்களை வதைப்பதை நிறுத்தினால் உலகின் பிரச்னைகள் தீரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பசு வதை
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக 22 வயதான முகமது அமீன் என்ற நபரை குஜராத் காவல்துறை கைது செய்தனர். அந்த வழக்கின் விசாரணை தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திரா, முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அதில் "பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
நீதிமன்ற தீர்ப்பு
பசுக்கள் கவலையுடன் இருக்கும் இடத்தில் செல்வங்கள் அழிந்து போகும். பசு ஒரு விலங்கு அல்ல, அது ஒரு தாய். அதில் தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்கின்றனர். எனவே, பசுவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம்.
பசு சாணத்தை வீடுகளில் பூசினால் அணு கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல் உண்மை. பசுவின் கோமியம் தீராத நோய்களையும் தீர்க்கும். என்றைக்கு பூமியில் பசுவின் ரத்தம் சிந்தாமல் இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்னைகளும் தீரும்” எனக் கூறியுள்ளார்.