பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் -நீதிமன்றம் அதிரடி
இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருமே பசுவை பாதுகாக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது . விசாரணைக்கு பின்னர் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி சேகர் குமார் யாதவ், பசுவதைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்.
பசுவுக்கு அடிப்படை உரிமை வழங்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.
Cows should be given fundamental rights, declared as national animal: Allahabad High Court
— Bar & Bench (@barandbench) September 1, 2021
Reports @Areebuddin14#CowSlaughter #AllahabadHighCourt
Read story: https://t.co/taMiRDt5iW pic.twitter.com/vQ2cclGVPQ
பசு என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தது அல்ல நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாக்க வேண்டும். ஆகவே, பசுவை தேசிய விலங்காக விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.