சென்னையில் மழைநீரில் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழப்பு
சென்னையில் உள்ள சிவாஜி நகரில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.
தொடரும் கனமழை
சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு
தொடரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
தேங்கிய மழை நீரில் பசு மாடு ஒன்று சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.