மும்பையிலிருந்து சென்னை வந்த 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

By mohanelango May 19, 2021 07:24 AM GMT
Report

மும்பையிலிருந்து மேலும் 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது.

 தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால் மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு ஒதுக்காததால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில் மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது.

மும்பையிலிருந்து சென்னை வந்த 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் | Covishield Vaccine From Mumbai Reaches Chennai

அந்த தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா விமானம் சென்னை விமானநி லையம் வந்தது. 1 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனா்.

அதன்பின்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.