புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தது 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
புனேவில் இருந்து 4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு போடுவதற்கு புனேவில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் 52 பார்சல்களில் சுமார் 4 லட்சத்து 20ஆயிரத்து 570 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசி மருந்துகள் நாளை தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.