கோவிஷீல்டு தடுப்பூசி கால இடைவெளி சர்ச்சை: மத்திய அமைச்சர் விளக்கம்

 கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளியை அதிகரித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது.

ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பது தான் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதனால் இது குறித்த குழப்பம் பொதுமக்களிடையே ஏற்பட்டது. இதுதொடர்பான அறிக்கை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவை வெளிப்படையாகவும் அறிவியல்பூர்வ தரவுகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டதாக கூறி உள்ளார்.

மேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினையை அரசியல்மயமாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்