கொரோனாவால் கோடீஸ்வரர்களான மருந்து நிறுவன அதிபர்கள்
கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதால் மருந்து நிறுவன அதிபர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வர்த்தக நிறுவனமான ‘போர்ப்ஸ்’, உலக அளவில் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, சுகாதாரத்துறையில் புதிதாக பெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ள 50 புதுமுகங்களை அந்த பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
அதில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்துள்ள அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா, ஜெர்மனி மருந்து நிறுவனமான பயோஎன்டெக் (பைசர் தடுப்பூசி) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் அடங்குவர்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் பங்குசந்தைகளில் அந்த நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததால் அவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.