கொரோனா மட்டும் இந்த உலகத்தோட கடைசி பெருந்தொற்று அல்ல- உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லை என்றும், கொரோனாவை தடுக்க அதிகம் செலவு செய்யும் அதேநிலையில் .
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவதொடங்கியது.
இதனால் 50-க்கும் அதிகமான உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லையென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டெட்ரோஸ் கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லையெனவும், காலநிலை மாற்றத்தையும், விலங்குகளின் நலனையும் சரிசெய்யாமல் மனித குளத்தின் நலத்தை மட்டும் மேம்படுத்துவது பலன்தராது என கூறினார்.
மேலும் , கொரோனாவை தடுக்க அதிகம் செலவிடுகிறோமோ தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிடுவதாகவும் டெட்ரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.