கொரோனா தடுப்பூசி செலுத்த நான்கு மாநிலங்களில் ஒத்திகை: எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?

covid19 vaccine india
By Jon Dec 28, 2020 12:46 PM GMT
Report

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியினை கடந்து விட்டது.

ஆனால் கொரோனாவை தடுக்கும் 4 தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில்ஆய்வில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி போடும் திட்டத்தில் எந்த குழப்பமும் வராமல் இருக்க 2 நாட்கள் ஒத்திகை பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்த 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.