அமெரிக்காவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ரெடி
அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும்மருந்துவ நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியானது குழந்தைகளுக்கு செலுத்துவது பற்றிய ஆய்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில் அமெரிக்கா புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது என்பதை இப்போது சுகாதார துறையின் அங்கமான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வழிபிறந்துள்ளது. அமெரிக்காவில் 2 கோடியே 80 லட்சம் குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.