தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு..கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு கடிதம்

Covid 19 Tamilnadu Central Govt Latter Night Lockdown
By Thahir Dec 22, 2021 07:37 AM GMT
Report

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், ராஜஸ்தான் போன்ற தொழில் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் கால் பதித்து விட்டது.

மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்ந்துள்ளது. டெல்டாவை விட தீவிரத்தன்மை கொண்டதால் 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடு அவசியமாகிறது.

மேலும், பண்டிகை காலம் நெருங்குவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவு ஊரடங்கு, எப்போதும் செயல்படும் உதவி மையம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பாசிட்டிவ் சதவீதம் 10-க்கு மேல் அதிகரிப்பு அல்லது ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 40 சதவீத படுக்கைகள் நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ள மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உச்சத்தை அடைவதற்கு முன்னதாக கட்டுப்படுத்த வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் பாசிட்டிவ் சதவீதம் 10-க்கு மேல் அதிகரிப்பு அல்லது ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 40 சதவீத படுக்கைகள் நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ள மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உச்சத்தை அடைவதற்கு முன்னதாக கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.