‘‘மாஸ்க் போடலைன்னா உள்ள போடுவியா நானும் ரவுடிதான்’’- காவல்துறையினரிடம் வம்பிழுத்த பெண்!

covid19 mask lady viralvideo
By Irumporai Apr 23, 2021 05:27 AM GMT
Report

கொரோனா பெருந் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வருகிறது.

கொரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.

இந்த சூழலில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தங்களைத் தற்காத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாஸ்க் அணியாமல் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் வம்பிழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சை பகுதியில் காவல்துறையினர்  ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதனால் கோபப்பட்ட அந்த பெண் இத்துனூண்டு மாஸ்க் அணியாதற்கு 200 ரூபாய் அபராதமா என  கோபத்துடன் சீறியுள்ளார் அந்த சிங்கப் பெண்.

அதனை மாவட்ட ஆட்சியரிடம் தான் கேட்க வேண்டும் என அந்த காவலர் கூறவே ,அவனையும் வரச்சொல் கேட்கிறேன் என்று கூறியதோடு அதனை வீடியோ எடுத்த காவலரை நோக்கி: ‘’ என்னைப் புடிச்சு உள்ள போடுவியா போடு நானும் ரவுடிதான்’’ என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் தான் நம்மை பாதுகாக்கும் என அரசு கூறி வருகிறது.  

இந்த நிலையில் தற்போது இந்த  பெண்ணின் செயலை இணைய வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.