Saturday, May 3, 2025

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வேண்டும்- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

covid19 tamilnadu cm
By Irumporai 4 years ago
Report

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதலவர் பழனிசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்:

தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.


கையிருப்பு வைக்கக்கூடிய வகையில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்

தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம் உள்ளதால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்

உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ள முதல்வர்.

செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வேண்டும்- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் | Covid19 Tamilnadu Leetr Cm Pm