கொரோனா வழக்குகள் வாபஸ், முதல்வரின் முதலைக் கண்ணீர் மக்களுக்கு தெரியும்– ஸ்டாலின் கடும் விமர்சனம்

tamilnadu dmk cmo
By Jon Feb 20, 2021 02:29 AM GMT
Report

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினர் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இன்று கொரோனா ஊரடங்கில் பதியப்பட்ட 10 லட்சம் வழக்குகள், சிஏஏ போராட்டத்திற்கான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

மேலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும் என்றார். முதல்வரின் அறிவிப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் ஊரடங்கில் மக்களை வழக்குகளால் வதைத்தார்கள்! அதனை சுட்டிக்காட்டி மீண்டும் ஜனவரியிலும் எடுத்துரைத்தேன்.

தற்போது தேர்தல் நெருங்கி வருவதால்தேர்தலுக்காக வழக்குகளை வாபஸ் என அறிவித்திருக்கிறார். முதல்வரின்முதலைக் கண்ணீரை மக்கள் நன்கறிவர்,அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்றுக என ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.