அதிகரிக்கும் கொரோனா- சென்னை ரயில்சேவையில் மாற்றம் ?
சென்னையில் மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னை மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது என்றும் நாளை முதல் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பேருந்துகளை தொடர்ந்து ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த நிலையத்திலிருந்தும் ரயில்கள் இயக்கப்படாது என்றும் முழு ஊரடங்கான ஞாயிற்று கிழமைகளில் ரயில் ஓடும், ஆனால் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், முழு ஊரடங்கு நாட்களில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ள தெற்கு ரயில்வே.
ஞாயிற்றுக்கிழமைகளில் முன் களப் பணியாளர்கள் மற்றும் முக்கிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம் என கூறியுள்ளது.