ரஷ்யாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா தொற்று!

Russia Covid19
By Thahir Jun 20, 2021 06:21 AM GMT
Report

ரஷ்யாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா தொற்று! | Covid19 Russia

அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜனவரி மாத இறுதியில் அங்கு நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பின் ஒரே நாளில் புதிதாக 17, 262 பேருக்கு அங்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா தொற்று! | Covid19 Russia

இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. மதுபான விடுதிகள், ஹோட்டல்கள், தேநீர் விடுதிகள் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை, கல்வித்துறை மற்றும் பொது போக்குவரத்து துறைகளில் பணியாற்றுபவர்கள் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.