கவலைபடாதீங்க நான் இருக்கேன் ஆதரிக்கும் அட்ராசிட்டி ரோபோ!

Covid19 Robotics
By Thahir Aug 11, 2021 09:57 AM GMT
Report

இந்தோனேசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவலைபடாதீங்க நான் இருக்கேன் ஆதரிக்கும் அட்ராசிட்டி ரோபோ! | Covid19 Robotics

வீடுகளில் இருக்கும் மின்சாதனப் பொருட்களை சேர்த்து இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, வீடுகளுக்கு வெளியே கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோவை ஈடுபடுத்தியுள்ளனர்.

பொருட்களை வழங்கிய பின், தனிமையில் உள்ளவர்களுக்கு ரோபோ ஆறுதல் வார்த்தைகளையும் கூறுகிறது. டெல்டா ரோபோட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ மூலம், பல்வேறு வகையில் பலன்களை பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தோனேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.