கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: மத்திய அரசு அனுமதி

Virafin ZydusCadila
By Irumporai Apr 23, 2021 12:35 PM GMT
Report

கொரோனா பாதிப்பு மிதமாக உள்ளவர்களுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

விராஃபின் மருந்து எடுத்துக் கொண்ட 7 நாட்களில் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் என இருந்தது என்று கூறப்படுகிறது.

இந்த பரிசோதனை 91.15 சதவீத நோயாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஸைடஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வாரம் ஸைடஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயின் ஆரம்பத்தில் இந்த மருந்தை பயன்படுத்தினால் நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த மருந்து உதவும் என்று கூறப்பட்டுள்ளது .