கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தவர் திடீர் மரணம்

Isolation corona infection sudden death
By Irumporai Apr 25, 2021 04:07 AM GMT
Report

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்திஇருந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு ,இவர் கடந்த(17.04.2021) தேதி அன்று கொரோனா பரிசோதனை செய்தார்; பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது.

ஆனால் படுக்கை வசதி இல்லாத காரணத்தால் வீட்டில் தனிமை படுத்தி கொள்ளுமாறு அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்கள் அறிவுறுத்தியதால் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்து வந்தார்.

கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தவர் திடீர் மரணம் | Covid19 Isolation Home Sudden Death

ஆனால், திருநாவுக்கரசிற்கு, எந்த மருத்துவ வசதியும் ,மருத்துவஆலோசனையும் பெற முடியாமல் இருந்து வந்த நிலையில், திருநாவுக்கரசு நேற்று அதிகாலை  காலமானார்.

அதே சமயம், திருநாவுக்கரசு தனது மைத்துனரிடம் மருத்துவமனையில் இடமில்லை என கூறி என்னைத் தனிமைப் படுத்திக் கொள்ள கூறினார்கள் என செல்போனில் கடைசியாக பேசிய ஆடியோ வைரலாக பரவி வருகிறது.