18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: என்றிலிருந்து தெரியுமா?

covid19 vaccine india
By Irumporai Apr 19, 2021 03:25 PM GMT
Report

மே-1முதல் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்றுஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றி பேசப்பட்டது. அதன்படி 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதியன்று கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவ, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

 இரண்டாவது தவணையாக 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இல்லாதோர் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 3-வது தடுப்பூசி திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது,