அக்டோபர்,நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் - எச்சரிக்கை!
India
Covid 19
By Thahir
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் மூன்றாவது அலையின் உச்சம் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இருக்கும் என மத்திய அரசுக்கு கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவின் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் தாக்கத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மூன்றாவது அலையின் தாக்கம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சத்தை தொடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியாவது மூன்றாவது ஆலையில் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.